சம்பவ இடத்திற்கு வந்து குரங்கை பிடித்து கூண்டில் வைத்து கொண்டு சென்ற வேளச்சேரி வனத்துறையினர்
திருவெற்றியூர் காவல் நிலைய சரகம் காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று மாலை மெக்சிகன் வகையைச் சேர்ந்த ஸ்பைடர் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதாக காவல் கட்டுப்பாட்டறை தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் நரசிம்மன் சம்பவ இடத்திற்கு சென்று அரியவகை குரங்கு இருப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேளச்சேரி வனச்சரக அலுவலகத்தில் இருந்து வந்த திலக்மாஸ் சியோ மற்றும் மூன்று வனத்துறை ஊழியர்கள் வந்து குரங்கை பிடித்து கூண்டில் வைத்து வனத்துறைக்கு கொண்டு சென்றனர்
இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த குரங்கு இந்த பகுதியில் எப்படி வந்தது என்று பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் யாரேனும் வீட்டில் வளர்த்து வெளியே தப்பி வந்ததா இல்லை விற்பனைக்காக கொண்டு வந்தார்களா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்