துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆலத்துடையான்பட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. ஆலத்துடையான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம்(09-09-2025) ஆலத்துடையான்பட்டி, ஆங்கியம் ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.
முகாமில் ஒன்றிய செயலாளர்கள் அர.ந.அசோகன், முத்துசெல்வன்,வட்டாட்சியர் சிவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் முத்து, காவல் ஆய்வாளர் முத்தையன், காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை,
ஊராட்சி செயலர்கள் சுரேஷ், பழனியாண்டி, அசோகன், மதன்,ராஜா,வருவாய் ஆய்வாளர் சிவகாமி ,கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் ஆலத்துடையான்பட்டி, ஆங்கியம் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இம்முகாமில் வருவாய்த்துறை,மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்