திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் முன்னதாக ஒன்று முதல் 8- வது வார்டு வரை உள்ள 8 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 9- வது வார்டு முதல் 15- வது வார்டு வரை உள்ள 7- வார்டுகளுக்கு வலங்கைமானில் கீழ அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு கூட்டுறவுத் துறையின் சார்பில் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் சிவசக்தி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.10 லட்சம் வங்கி கடனுக்கான காசோலையினையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை வழங்கினார்கள். இம்முகாமில் வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித் தமிழ் மாறன், திமுக பேரூர் செயலாளர் பா. சிவநேசன், வட்டாட்சியர் ஓம் சிவகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம.மாணிக்கவாசகம், க. செல்வம், பானுமதி விசிஆர், ரம்ஜான் பீவி சிவராஜ், வீரமணி, நூர்ஜஹான் ஜெகபர் அலி, ஆனந்த குமார், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், அபிநயா கரிகாலன், செல்வராணி பாஸ்கரன், அருள் முருகன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.