கரூர் செய்தியாளர் மரியான்பாபு
கரூர் மாவட்டத்திற்க்கு வருகை தரவிருக்கும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் குறித்து கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவினர் பங்கேற்றனர்.
கழக பொது செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் கரூரில் வருகிற 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதால் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு பாஜக மாநில துணைத் தலைவர் இராமலிங்கம் மற்றும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் ஊர்வலமாக அதிமுக அலுவலகத்திற்க்கு வந்தனர். அதிமுக சார்பில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி, முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் சின்னசாமி, முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாஜகவினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக பொது செயலாளர் எடப்பாடியார் கலந்து கொள்ளும் கூட்டத்தை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும், செயல்படுத்த வேண்டும் என சிறப்புரையாற்றினார்கள்.