பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ஒன்பத்துவேலி ஊராட்சியில் ரூ. 14. லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஒன்பத்துவேலி ஊராட்சியில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.14- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு,அம்மாபேட்டை
வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தினி, நவரோஜா,மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி வட்ட அலுவலர் அனுசியா, ஊராட்சி செயலர் குமரமோகன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.