கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான கலை இலக்கிய போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வக்கோட்டை ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
எட்டாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 6 7 8 வகுப்பு மாணவர்களுக்கு பெண்மையை போற்றுவோம், வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பிலும், ஓவியப்போட்டி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலக்கிய காட்சி , திருக்குறள் காட்சி என்ற தலைப்பிலும், கவிதை போட்டி புத்தகம் பேசும் என்ற தலைப்பிலும் நடைபெற்றது. 9 10 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டி எனக்கு பிடித்த புத்தகம், மக்கள் வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பிலும், 11 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி புத்தகம் என்ன செய்யும், இனிக்கும் இலக்கியம் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலர் மெகராஜ் பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பரிசு வழங்கும் நிகழ்விற்கு கந்தர்வக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் பிரவீன் தலைமை தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார்.இப் போட்டியினை தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள்
துணை ஆளுநர் பரமசிவம்,உறுப்பினர்கள் ரோட்டரி மாவட்ட குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி, முருகேசன், தேவேந்திரன்,மணிமொழிச் செல்வன், லோகநாதன் சேட்டு ஆசிரியர்கள் சாந்தி, பிரதீபா நர்மதா,கண்ணன் வானவில் மன்ற கருத்தாளர் வசந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அக்கச்சிப்பட்டி முதலிடமும், காட்டுநாவல் இரண்டாம் இடமும், வீரடிப்பட்டி மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். பேச்சுப் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி, தமிழ் இனியா நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி இரண்டாம் இடமும் ஏழாம் வகுப்பில் தனுசுயா ஸ்ரீ கந்தர்வகோட்டை நடுநிலைப்பள்ளி முதலிடமும், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி கல்லாக்கோட்டை சபிதியா இரண்டாம் இடம், ரிதனியா மாறன் மூன்றாம் இடம், எட்டாம் வகுப்பில் சாந்தினி நடுநிலைப்பள்ளி வீரடிப்பட்டி முதலிடமும், ரகுனா ஸ்ரீ அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடமும், கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஜூன்த் பாத்திமா முதலிடமும் பெற்றனர்.
ஓவியப் போட்டியில் காட்டுநாவல் முதலிடமும், கோகுல சிவஸ்ரீ இரண்டாம் இடம் சுபிக்ஷா மூன்றாம் இடம் வெற்றி வெற்றி பெற்றனர்.கவிதை போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டு நாவல் காயத்ரி முதலிடமும், ஜெயஸ்ரீ அக்கச்சிப்பட்டி இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். நிறைவாக வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்விநன்றி கூறினார்.