சாலைகள் சீரமைப்பு – மனித-வனவிலங்கு மோதலுக்கு தீர்வு கோரி வணிகர்கள் 24 மணி நேர போராட்டம். கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வணிகர்கள் தீவிர முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றர் .சாலை வசதிகள் மோசமடைந்துள்ளன.

மேலும், காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகள் கிராமங்களுக்கு அடிக்கடி புகுந்து மக்களை உயிரிழக்கச் செய்வதும், விவசாய பயிர்கள் சேதமடைவதும் அதிகரித்து வருகின்றன.

இந்த இரு பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேரம் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்கள் அறிவித்தனர்.

கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வழக்கமாக கூட்டம் நிறைந்த கூடலூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. பயணிகள் இல்லாமல் பேருந்துகள் காலியாக நிற்கும் காட்சி, போராட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தியது.


“அரசே! மக்கள் வாழ்வதற்கு வழிவகை செய்!” என பொதுமக்கள் பாதாகைகள் ஏந்தி, கை கோர்த்து மனித சங்கிலி அமைத்தனர் சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த சங்கிலி போராட்டம், மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

கூடலூர் – பந்தலூர் பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. வாகனங்கள் செல்லவே சிரமமாகிறது. அதோடு, காட்டு விலங்குகள் கிராமங்களில் புகுந்து மனித உயிரிழப்புகளும், பயிர்ச் சேதங்களும் தினசரி நிகழ்கின்றன. இதற்கு அரசு நிரந்தர தீர்வு காணவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தும் நிலை ஏற்படும்” என அவர்கள் தெரிவித்தனர் வணிகர்கள் கடைகள் அடைத்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முழுமையாக அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

. “சாலைகளும் பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. வணிகர்களின் போராட்டம் நியாயமானதே” என பலர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *