புதிய தமிழகம் கட்சி சார்பில் இமானுவேல் சேகரன் 68 ஆவது வீரவணக்கம்..

கரூரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இம்மானுவேல் சேகரன் (9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957 ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். , தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும், ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார்.

“ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு நடத்தியவர்.

தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர்.எனஎண்ணற்ற ஒதுக்கப்பட்ட மக்களுக்காக உயிர் தியாகம் செய்த மாமனிதர் இமானுவேல் சேகரன்.இவருடைய 68வது வீரவணக்க நாளில் கரூர் மாவட்டத்தில் புதிய தமிழக கட்சி போன்ற பல்வேறு அமைப்புகள் அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கவின் குமார், தான்தோன்றி ஒன்றிய செயலாளர் வெள்ளியணை ராம்,கரூர் நகர செயலாளர் தோகை கவின் குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *