வாகன ஓட்டுநர்கள் சிறிய ரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கும் அவர்களை முதலாளியாக்கும் வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து கடனுதவி வழங்கி வரும் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற லஷ்மிமித்ரா பைனான்ஸ் நிறுவனம் தனது 10 வது கிளை துவக்க விழா ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் தேரடி அருகே நடைபெற்ற துவக்க விழாவில் லஷ்மிமித்ரா நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதரன் , ஆலோசகர் சுந்தர்ராஜன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்த 20 பேருக்கு முதற்கட்டமாக சிறிய ரக சரக்கு வாகனம் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் சங்கரநாராயணன் மண்டல மேலாளர் மேலாளர் திருமலை குமார், கிளை மேலாளர்கள் பிரபு , அன்பு, நிறுவன ஊழியர்கள், ஸ்ரீபெரும்புதூர் சேர்மன் சாந்தி சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்