இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – வெள்ளையாபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தேவந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவை சார்பில்,அவரது திருவுருவ சிலைக்கு பேரவையின் நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில்,நவீன்ராஜ், அழகேசன்
முனியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல் வெள்ளையாபுரம் கிராமம் சார்பில் கிராமத் தலைவரும் வார்டு உறுப்பினருமான ஜோதிராஜா, கணேசன், ஆறுமுகம் மற்றும் கிராம பொது மக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்தாக அவரது திருவுருவ சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் டிரம்ஸ் மேளம் முழங்க அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்
ஆடி, பாடி ஊர்வலமாக கிராமம் முழுவதும் வலம் வந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் வாகனங்களில் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்
மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.