அரியலூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்காக ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்தை இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், சென்னை பத்திரிக்கை தகவல் துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் அரியலூர் நகரில் அமைந்திருந்த தனியார் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் தகவல் தொடர்பு துறையின் முக்கியத்துவம், செய்தியாளர்களின் பங்கு, ஊடக நெறிமுறைகள், பொது மக்கள் தொடர்பு மற்றும் பொறுப்பான செய்தியளிப்பு போன்ற தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பயிலரங்கத்தின் போது ஊடகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சமூக ஊடகத்தின் தாக்கம், …