வால்பாறை நடுமலை உடைந்த பாலம் அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் இந்து முன்னணி சார்பாக கிடாவெட்டி அன்னதானம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நடுமலை உடைந்த பாலம் அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் இந்து முன்னணியின் சார்பாக கிடா வெட்டு மற்றும் சிறப்பு பூஜைகளுடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா ஆறாம் ஆண்டாக இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் இந்து முன்னணியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலயங்களில் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து மதியம் சுமார் ஒரு மணியளவில் அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் கிடா வெட்டு நடைபெற்றது அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்