தர்மபுரியில் மலையாள மொழி பேசும் மக்களின் கேரள சமாஜம் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒணம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் 23வது ஆண்டாக ஒணம் திருவிழா சமாஜத தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் கொண்டாடப்பட்டது.சமாஜ செயலாளர் ஹரிகுமார் பொருளாளர் சத்திய நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக சமாஜப் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் இட்டு அனைவரையும் வரவேற்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தொழிலதிபர் முன்னாள் அரிமா மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் விழாவிற்கு வந்திருந்தவர்களை மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் அணியின் சார்பில் கை கொட்டிக் களி என்ற நடனமும் கேரள மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேரள பாரம்பரிய ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் 23 வகை பதார்த்தங்களோடு உணவு பரிமாறப்பட்டது. இப் பாரம்பரிய விழாவில் துணை தலைவர் நாராயண சாமி இணை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட சமாஜ உறுப்பினர்கள் நண்பர்கள் 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.