திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். நேற்று ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். காலை 8- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
காலை 10- மணிக்கு ஸ்ரீ அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதியுலா காட்சியும் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையையும், ஸ்ரீ அம்பாள் வீதியுலா காட்சியையும் மண்டகப்படி உபயதாரர் மன்னார்குடி டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
மதியம் 12- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 8- மணிக்கு ஆலய திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாள் வீற்றிருந்து, தெப்பத்தில் வலஙகை எஸ். ஏ. எஸ் சந்திசேகரன், திருக்கோளம்புதூர் எஸ்.தினேஷ் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது, மதியம் அபிஷேக ஆராதனைகள் & இரவு தெப்பத்திருவிழா நிகழ்வையும் மண்டகப்படி உபயதாரர்கள் திருவாரூர் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் சார்பில் எஸ்.ராம்பிரசாத்& குடும்பத்தினர், எஸ்.கார்த்திகேயன்& குடும்பத்தினர்.
சிறப்பாக செய்திருந்தனர். புஷ்ப அலங்காரம் உபயதாரர் வரதராஜன் பேட்டை தெரு யோகராஜ் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினரும், வாணவேடிக்கை உபயதாரர் உப்புக்காரத் தெரு அருணா ஃபயர் ஒர்க்ஸின் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் காவல் சரக ஆய்வாளர் முத்துலெட்சுமி தலைமையில் ஏராளமான ஆண், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
ஆவணி ஞாயிறு, தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.