திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 6- மணியளவில் ஸ்ரீ அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, செட்டித் தெரு வாசிகள் மற்றும் ஸ்ரீ சீதளாதேவி நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *