காஞ்சிபுரத்தை புகைப்படக் கலைஞர் குமார் (30) இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு புகைப்படம் எடுக்க சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த புகைப்படக் கலைஞர் குமாரின் குடும்ப நலன் கருதி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் காஞ்சிபுரம் புகைப்பட கலைஞர்கள் whatsapp குழுக்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் புகைப்படக் கலைஞர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு 200 முதல் 2000 வரை பண உதவி செய்து இவை அனைத்தும் மொத்தமாக 50200 வரை சேர்ந்தது.

புகைப்படக் கலைஞர்கள் வழங்கிய மொத்த தொகை 50 ஆயிரத்து 200 ரூபாயை காஞ்சிபுரம் புகைப்பட கலைஞர்கள் உயிரிழந்த குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த நிகழ்வு புகைப்பட கலைஞர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *