கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை மற்றும் சார்பு அணி சார்பாக மரியாதை செலுத்தும் விதமாக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்திலிருந்து தொமுச பேரவை அகில இந்திய செயலாளர் வி.பி.வினோத்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் திம்பம் பட்டி ஆறுச்சாமி அனைவருக்கும் இனிப்பு வழங்கிசிறப்பித்த நிலையில் அனைவரும் உறுதிமொழியேற்றனர் அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை ந.கணேசன், நகர துணை செயலாளர் சரவணபாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளரும் நகர் மன்ற உறுப்பினருமான ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் நகர் மன்ற உறுப்பினருமான க.மகுடீஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர்கள் காமாட்சி கணேசன், சத்தியவாணிவேலுச்சாமி,இந்துமதி சிற்றரசு, செல்வக்குமார் அன்பரசன், கனகமணி, நகர மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, இளைஞரணி துணை அமைப்பாளர் மணீஷ் நிர்வாகிகள் பிரதீஷ், கார்த்திக் தொழிற்சங்க துணைத்தலைவர் ரவிக்குமார், கவர்க்கல் பழனிச்சாமி உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்