கமுதியில் பிரதமர்மோடி பிறந்தநாள்விழா பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடிஜி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கமுதி பேருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலை முன்பாக பாரத பிரதமர் மோடியை அவர்களின் பேனர் வைத்து இனிப்புகள் வழங்கி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ .சி . சிதம்பரனார் சிறுவர் பூங்காவில்மரங்கன்று நடப்பட்டன மற்றும் கமுதி வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சமேதர் ஆலயத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோல் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தூய்மை பணி செய்யப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கமுதி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேசிய மாநில மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் தீவிர உறுப்பினர்கள் கிளை தலைவர்கள் தேசப்பற்றாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக எல்.வேலவன் கமுதி தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் நன்றி கூறினார்