கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்க்கு வருகை புரிந்தார்.
பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சமூக நீதி தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனார். அதனையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி இயக்கம் நிகழ்வுவில் கலந்து கொண்டு சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.
துணை முதல்வர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மீ. தங்கவேல், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேய கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.