பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர்,
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அழைப்பினை ஏற்று, பிரான்சில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் பலரும் இன்று பிரான்சுக்குப் புறப்பட்டனர்.
இந்தப் பயணத்தில் எழுத்தாளர் முல்லை செல்லதுரை, முனைவர் இரா. திருமூர்த்தி, முனைவர் இரா. வனிதா, ஞா. பொற்கொடி, பேராசிரியர் சுதாராணி, பேராசிரியர் மலையரசி, முத்துச்செல்வன், டாக்டர் பெரியநாயகசாமி, முனைவர் சுப்புலெச்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் பிரான்சுடன் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இத்தமிழறிஞர்களை இன்று (18.9.2025) மாலை 6 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க ஆதிலிங்கம், அமைப்புச் செயலாளர் காசிநாதன், தலைமை மகளிர் துறை இயக்குநர் பிச்சி ஆதிலிங்கம், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் லயன். கு. மேழிச்செல்வன், லயன். முகுந்தன் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர்.