தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்திய
பல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான ஒருநாள் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி தொடக்க விழா பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் குழு உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மருத்துவர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார். பதிவாளர் (பொ.) கோ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். உள்தர உறுதிப்பாட்டு மைய இயக்குநரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை துறைத்தலைவர் முனைவர் வீ.செல்வக்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.

வளர்தமிழ்ப் புலமுதன்மையரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை துறைத்தலைவருமான முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், கல்விநிலை ஆய்வு இயக்கக இயக்குநர் மற்றும் நாடகத்துறை துறைத்தலைவர் பொறுப்புமான முனைவர் செ.கற்பகம் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். முனைவர்ப்பட்ட மொழிபெயர்ப்புத் துறை மாணவர் த.வீரமணிகண்டன் இணைப்புரையாற்றினார்.

தொடர்ந்து இப்பணிப்பயிற்சியில் முனைவர் இரா.சு.முருகன் மொழிபெயர்ப்பில் ஒரு மொழிபெயர்ப்பாளர் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பாளர்கள் வகுத்துச் சென்ற மொழிபெயர்ப்பின் நெறிமுறைகளை முழுமையாக படித்து பின்பற்றவேண்டும்.

ஒரு மொழிபெயர்ப்பாளர் மூன்று மொழி அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுது ஒரு மொழிபெயர்ப்பு செய்யும் போது அது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக மக்கள் மத்தியில் உலா வரும் என்று எடுத்துரைத்தார். முனைவர் சௌ.வீரலெஷ்மி தாய்மொழி வழிக் கல்வியை மேம்படுத்த, அறிவுசார் நூல்களைத் தாய் மொழியில்அறியகலைச்சொல்லாக்கம் தேவை என்றும் முனைவர் ப.இராஜேஷ் தமிழ் இலக்கிய நாவல், சிறுகதைகளை மொழிபெயர்க்கும் போது வழக்குச்சொற்கள், மரபுச் சொற்கள், உறவுச் சொற்களின் குறித்தும் முனைவர் சா.விஜயராஜேஸ்வரி பயன்பாடுகளைக் ஆய்வாளர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பும் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மொழிபெயர்க்கும் ஏற்படும் சிக்கல்களைக் குறித்து பயிற்சி அளித்தார்கள்.

முன்னதாக மொழிபெயர்ப்புத் துறைத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.)மான முனைவர் இரா.சு.முருகன் வரவேற்றார்.மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ப.இராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *