போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் மனித உரிமைகள் கழகம் சார்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு உரிமை நிகழ்ச்சி தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு உரிமை பற்றிய நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் கௌரவ தலைவர் எஸ். சுப்ரமணியன் தலைவர் எஸ் இராமநாதன் கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமை வகித்தனர் கல்லூரியின் உபதலைவர் எஸ்.வி.எஸ்.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சிவக்குமார் அனைவரையும் வாழ்த்துரை வழங்கினார்.
மனித உரிமைகள் கழக ஒருங்கிணைப்பாளர் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் கே.வனிதீஸ்வரி அனைவரையும் வரவேற்றார் மனித உரிமைகள் பற்றி தேசியம் இனம் பாலினம் மதம் மொழி அல்லது எந்த அந்தஸ்தையும் பொருட் படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு என்னனை பற்றியும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு என்பது அனைவருக்கும் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் சமமாகவும் பிறந்தவர்கள் என்ற கருத்தை உணர்ந்து உலகளாவிய மனித உரிமைகளுக்கான பிரகடனம் போன்ற சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களால் பாதுகாக்கப்படும் அடிப்படை உரிமைகளை அறிந்து கொள்வதைக் குறிக்கும் விழிப்புணர்வு மனித உரிமைகளை மேம்படுத்தவும் சமூகத்தில் அவற்றின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கல்லூரி முதல்வர் எஸ் சிவகுமார் சிறப்பு விருந்தினர்.
உத்தமபாளையம் வழக்கறிஞர் ஆர்
சத்தியமூர்த்தி ஆகியோர் மாணாக்கர்களுக்கு புரியும்படி விளக்கி பேசினார்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜி. தங்கத்துரை நன்றி உரையாற்றினார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனித உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.