பரமத்திவேலூர் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் பி. பி.தனராசு தலைமை வகித்தார். வேலூர் பேரூர் செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், நவலடிராஜா, பேரூர் அவைத்தலைவர் மதியழகன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன்,பேரூராட்சி துணைத்தலைவர் ராஜா,பேரூர்இளைஞரணி வாழை தினேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளர் கே.எஸ் மூர்த்தி,மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் முகாமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்கள்.
மேலும், உடனடி தீர்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்பிடச் சான்று, சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் இம்முகாமில் 13துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பேரூர் துணைச்செயலாளர் செந்தில்நாதன், மேற்பார்வையில் பேரூராட்சி உறுப்பினர்கள் துரைசெந்தில், மணிகண்டன், தங்கம் செந்தில்நாதன், லதாகோபி,ஜெயதேவி சுரேஷ், ஒன்றிய பிரதிநிதி பழனிராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கினார்கள்.இம்முகாமில் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கோவிந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கருணாநிதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,மற்றும் வேலூர் பேரூராட்சி சுகாதார அலுவலர் செல்வக்குமார், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.