கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். எட்டாவது புத்தக திருவிழாவிற்கான பதாகைகள், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
முன்னதாக புத்தகத் திருவிழாவிற்கான ஒன்றிய அளவிலான கலை இலக்கிய போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க புத்தகத்தில் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுகள் வழங்கி பாராட்டப்படும். நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும் எனவும், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மந்திரமா தந்திரமா உள்ளிட்ட நிகழ்வுகள் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் எனவும், புத்தகத் திருவிழா குறித்து பெற்றோர்கள், பொது மக்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக புத்தகத் திருவிழாவில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கியும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றும் பரிசுகள் பெற்றுள்ளனர். அதேபோல இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்வமுடன் புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதாக மகிழ்வுடன் தெரிவித்தனர். புத்தகத் திருவிழா குறித்து கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக புத்தகத் திருவிழாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி ஒன்றியத்தில் சிறப்பாக நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி வாசிப்போம் என உறுதி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்விஜாய்,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.