கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்
திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டை மாரியம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் 35 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு பச்சைக்காளி பவளக்காளி திரு நடன விழா நடைபெற்றது” ஆலயத்தில் இருந்து பச்சைக்காளியும் பவளக்காளியும் விதி உலா புறப்பட்டு நேற்று இரவு 9 மணிக்கு மேல் ஆதிலட்சுமி நகரில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் பச்சைக் காளி – பவளக்காளி உறவாடும் நிகழ்வு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பச்சைக் காளி – பவளக்காளி திரு நடனம் ஆடியது .நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன் ஸ்தபதி விஜயன் குடும்பத்தினர்கள் மற்றும் தெரு வாசிகள் அம்மனிடம் திருநீற்று பூசி அருளை பெற்றனர்