மதுரை அனுப்பானடி – சிந்தாமணி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அந்தப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை யில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் அந்த தீயானது டிரான்ஸ்பார்மர் முழுவதும் பரவி மள,மளவென எரியத்தொடங்கி யது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விட்டு டிரான்ஸ் பார்மரில் எரிந்த தீயை அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்தில் மின் வயர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் தீயில் எரிந்து சேதமடைந்த வயர்களை உடனடியாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.