தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.74.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள மூன்று வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தாண்டவன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு ரூ.74.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இக்கட்டடம் மொத்தம் 231.80ச.மீ (2494.17 ச.அடி) பரப்பளவில், தரைத்தளத்தில் மட்டும் மூன்று வகுப்பறை கட்டடங்களுடன் கட்டப்பட உள்ளது. இக்கட்டடம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் அமைய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திவ்யபாரதி,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *