கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல மண்டல் தலைவர் எஸ்.செந்தில் முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல், மண்டல் பொதுச் செயலாளர் முகேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் வினு, பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினரும் வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளருமான பாபா ரமேஷ் மற்றும் காயத்ரி ஏஜன்சீஸ் தவசிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவித்து உடை மற்றும் சமபோஜன பந்தி விருந்து வழங்கி சிறப்பித்தனர்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இவ் விழாவில் பாஜகவின் மாநில, மாவட்ட, மண்டல, மகளிரணி, மற்றும் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்