தென்காசி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் போலீஸ் துணையுடன் கால்வாய் அமைக்கும் பணியை நேற்று துவங்கிய நிலையில் அந்தப் பகுதி பொதுமக்கள்
சேர்ந்தமரம் – இடைகால் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா பொது மக்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அதிகாரிகளிடம் பொது மக்களின் எண்ணத்திற்கு மாறாக அதிகாரிகள் அத்துமீறி செயல்பட நினைப்பதை அனுமதிக்க முடியாது. எனவே கள்ளம்புளிகுளத்தில் தனி கால்வாய் அமைக்கும் பணியினை உடனடியாக அரசு கைவிட வேண்டும் இல்லையேல் எனது தலைமையில் சாலைமறியல் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கள்ளம்புளி குளத்தில் கால்வாய் அமைக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பணியை கைவிடுவதாக கூறினார்கள்

.அதன்பின்பு சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா பொதுமக்களிடம் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம் இதன் பிறகும் அதிகாரிகள் ஏதாவது குறுக்கு வழியில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் இனிமேல் நடைபெறும் போராட்டங்களுக்கு நானே தலைமை தாங்கி நடத்துவேன். என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல் பேரிக்காடு அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று அதிகாரிகள் நினைத்தால் ஒரு காலமும் அதனை விடமாட்டோம் இந்த மக்கள் வாக்களித்து நான் இங்கு சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்துள்ளேன் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இவர்களுடன் இருந்து போராட நாங்கள் தயாராகத்தான் உள்ளோம் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

பக்கத்து ஊரை சார்ந்தவர்களும் விவசாயிகள் தான் அவர்கள் பாதிக்கப் படுவது இவர்கள் நோக்கம் இல்லை. அதற்காக இவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க தயாராகவும் இல்லை, உங்கள் உயரதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்த அரசியல்வாதிகளிடமும் சொல்லுங்க 50 பேருடன் துவங்கிய போராட்டம் இன்று ஆயிரம் மக்களுடன் நடக்கிறது. இது கூடுமே தவிர குறையாது என்று இந்த ஊர் பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவும் எடுத்த நிலையில் அதனை சற்று நிறுத்தி வைத்துள்ளோம் .

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எட்டப்படும் என்ற நிலையில் அடக்கு முறையினால் எதையாவது செய்ய நினைத்தால் அடையாளம் தெரியாமல் ஆகி விடுவார்கள் என்பதை உங்களுக்கு அழுத்தம் கொடுப்பவர்களிடம் கூறிவிடுங்கள் கூறினார்.

பின்னர் இந்த திட்டத்தை இன்று கைவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்த பின்னர் இன்று மட்டுமல்ல இந்த பிரச்சினை சுமூக நிலை எட்டாத வரை அதிகாரிகள் இங்கு வந்து மக்களை துன்புறுத்தக்கூடாது. இந்த குளத்தில் இருந்து ஒரு நூலை கூட எடுக்க முடியாது என்று கூறினார் . அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சே கிருஷ்ணமுரளியின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிகழ்வின் போது தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *