துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் இந்து முன்னணி சார்பில் 19/09/2025 அன்று இந்து முன்னணி நகர தலைவர் சிவா (எ) சிவபிரகாஷ் தலைமையில் வீரத்துறவி அகில இந்திய இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் ஜீ 98 வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில்
நகர தலைவர் சிவா ஏற்ப்பாட்டில் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் ராஜேஷ் ஜீ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணிப்பு செய்தார்.
பொதுமக்கள் 24 மணி நேரமும் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெற 94 87 17 52 45 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று நகர தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.இதில் இந்து முன்னணி நகர செயலாளர் கணேஷ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்