ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு
“சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மாத ”மஹாளய அமாவாசை”யை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித்திடவேண்டியும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை வெகுசிறப்பாக நடைபெற்றது.
மஹா பிரத்தியங்கிராதேவி-கால பைரவருக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.