பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் ஆணையின்ப்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலி்ன் படி பெரியகுளம் தெற்கு ஒன்றியம் சார்பாக கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் தேனி மாவட்டத்திற்கு வருகை புரிவதை சிறப்பாக வரவேற்க வேண்டும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றி அபார வெற்றி பெற கட்சியின்நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .