கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகிய திரு நாட்களை முன்னிட்டு கம்பம் சிக்னல் அருகே அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் தொழிலதிபர் டாக்டர் எம் வேல் பாண்டியன் ஒருவர் இரத்ததானம் வழங்குவதால் விலைமதிப்பற்ற மனித உயிர் காப்பது குறித்தும் தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதை வலியுறுத்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து முகாமில் இரத்த தானம் வழங்கிய நபர்களை ஊக்கப் படுத்தும் விதமாக நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் இந்த முகாமில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் முகாமில் ரத்தத்தை சேகரித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்