தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம் எழுப்பினர் கிராமத்துக்கு உட்பட்ட சர்வே எண் 404/1ல் உள்ள 0.83.00 ஹெக்ட்டர் மற்றும் சர்வே எண் 404/2ல் உள்ள 0.83.00 ஹெக்டர் கொண்ட நீளமானது
நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலமாகும் மேற்படி நிலம் மற்றும் அதனை அடுத்த நிலங்கள் காப்பு காடுகளாக உள்ளது இந்த நிலத்தில் 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத்தால் ஊரணி வெட்டப்பட்டது அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்
மேலும் காப்பு காடுகளில் உள்ள புள்ளிமான் கடமான் நரி போன்ற வனவிலங்குகள் மற்றும் கால்நடைகள் கோடை காலத்தில் தாகத்தை தீர்க்க ஊரணியில் தண்ணீர் குடித்து வந்தது இந்த நிலையில் வண்டிப்பாதை தண்ணீர் செல்லும் வாய்க்காலும் உள்ளது இந்த நிலையில் கலாவதி என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டது
பட்டா நிலம் இல்லா ஆதிதிராவிட விவசாயிகளுக்கு விவசாய நிலங்கள் வழங்கும் அரசிட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவாகும் மேற்படி நிலங்களை ஆதிதிராவிடர் அல்லாத இதர மக்களுக்கு உரிமை மாற்றம் செய்ய சட்டப்படியான தடை உள்ளது அவ்வாறு உரிமை மாற்றம் நடைபெற்றால் மேற்படி பட்டாவை ரத்து செய்யவும் வருவாய்த்துறையினருக்கு அதிகாரம் உள்ளது
இந்த நிலையில் கலாவதி என்பவருக்கு கொடுக்கப்பட்ட ஒப்படைப்பு பட்டாவில் கண்ட நிபந்தனைகளின் படி அனுபவித்து வரவில்லை மாறாக கலாவதி கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்படி நிலத்தை ஐயம்பெருமாள் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்
மேலும் ஐயம் பெருமாள் இந்த வருடம் ஜனவரி மாதம் சிம்ரிதா என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நபர் அல்ல தற்போது மோசடியாக கிரயம் பெற்றுள்ள சிம்ரிதா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊரணியை சமப்படுத்தும் பணியை செய்து வருகிறார்
அதன் அருகில் உள்ள வாக்காளையும் சேதப்படுத்தி உள்ளார் ஊர் மக்களுக்கு குடிநீருக்காக வரும் குடிநீர் குழாயவும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார் வண்டிப்பாதையே பொதுமக்கள் பழங்க விட முடியாத அளவுக்கு வேலி அமைப்பு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எங்கள் மீது பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆகையால் உடனடியாக பட்டாவை ரத்து செய்து அந்த இடத்தை மீண்டும் அரசு கையகப்படுத்தி எங்களுடைய கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோசம் எழுப்பினர் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்