கரூர் செய்தியாளர் மரியான் பாபு
வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..
கரூரில் சட்டவிரோதமாக தினசரி மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது அதனையொட்டி நாட்டுமண் என்று சொல்லி வெளியூர் அனுமதி சீட்டில் மணல் கடத்தி வருவதாக குற்றச்சாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்னியர் மக்கள் கட்சி சார்பில் நிறுவனத் நிறுவனதலைவர் சக்தி படையாட்சி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வன்னியர் மக்கள் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெரூர் பகுதியில் காவிரி ஆற்றில் நெரூர்- உண்ணியூர் புதிய பாலம் அடியில் மறவா பாளையம், N புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை போன்ற கிராமங்களில் காவேரி ஆற்றில் தினசரி சட்டவிரோதமாக இரவு நேரத்தில் ராட்சச இயந்திரங்களைக் கொண்டு கனரக வாகனங்கள் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் செங்கல் சூளைக்கு நாட்டு மண் எடுத்து செல்வதாக சொல்லி போலியான வெளியூர் அனுமதி சீட்டு மூலம் லாரிகளில் நூதன முறையில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது .பகல் மற்றும் இரவு நேரங்களில் தினசரி திருட்டு மணல் கடத்துபவர்கள் இப்பகுதியில் பிரதான சாலையில் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
காவிரி ஆற்றை நம்பி தான் இப்பகுதி விவசாய மக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யப்படுகிறது. கரூர் – திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கரூர் நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே சமூக அக்கறைகளுடன் இந்த சட்ட விரோத மணல் திருட்டு ஈடுபடும் நபர்களுடன் எங்கள் கட்சி சார்பில் தட்டிக் கேட்டதற்கு கரூர் மாவட்ட திமுக பிரதிநிதி டி.எஸ்.பி சுப்பிரமணி, வி.பி.எஸ் ராஜ்குமார், குணசேகரன், சரவணன் போன்ற திமுக நிர்வாகிகள் மிரட்டுவதுடன் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி அனுமதி பெற்று இந்த திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
என்று தைரியமாக சொல்கிறார்கள். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மணல் கடத்தல் சம்பந்தமாக தகவல் தெரிவித்துடன் அதனை தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் என்பவரை அடையாளம் தெரியாத மணல் கொள்ளையர்கள் அவரை வேண்டும் என்று சம்பவ இடத்திற்கு வர சொல்லி விபத்துக்குள்ளாகினர்.
தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.மேலும் காவிரி ஆற்றில் பகுதியில் மணல் திருட்டுவது ஒரு கொலை சம்பவம் கடந்த மாதத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இப் பகுதியில் உள்ள புதிய பாலம் அடியில் அக்ரஹாரம், அரங்கநாதன்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து சட்ட விரோதம் மணல் திருட்டு நடைபெற்றுள்ளது.
உடனடியாக இந்த சட்ட விரோத மணல் திருட்டை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் எத்தனை போட்டியில் செயல்பட வேண்டாம் என்று வன்னியர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்திவேல் படையாட்சி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.