தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து யானைகள் விளைநிலங்களில் புகுந்த நிலையில் நான்கு யானைகள் வனத்துறை மற்றும் விவசாயிகளால் விரட்டி காட்டினுள் அனுப்பப்பட்டது.

இருப்பினும் இந்த ஒற்றை யானையான தெனாலி யானை அனைவருக்கும் போக்கு காட்டுவதில் வல்லவனாக காண்கிறான் இந்தப் பகுதிகளில் பயிரிட்டுள்ள விவசாயிகளான பெண்ணை மா பலா நெல் ஆகிய பயிர்களை தன்னுடைய உணவாக்குவதில் வல்லவன் இந்த ஒற்றை யானை இரவு முழுதும் விவசாயிகள் யானைகளை விரட்டுவதிலேயே தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்றனர் பகலில் வலம் வரும் யானைகள் வாழை தென்னை பயிர்களை முழுவதுமாக சாய்த்து சேதப்படுத்தி வருகிறது சம்பந்தப்பட்ட வனத்துறையினர்.

இடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இதுவரை எட்டப்படவில்லை இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது என மிகுந்த வருத்தம் தெரிவிக்கின்றனர் பயிரிட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பதால் இப்பகுதிகள் வசிக்கும் மக்கள் தங்கள் உடமைக்கும் விளைநிலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள இப்பகுதி விவசாயியான இஸ்மாயில் மற்றும் முகமது துரை ஆகியோர் யானைகள் விவசாய நிலத்திற்குள் வருவதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *