கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கடந்த 2024-25-ம் ஆண்டு 10 -ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. கடந்த வாரம் திருச்சியில், அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்
தலைமை ஆசிரியர், மற்றும் தலைமை ஆசிரியைகளுக்கு
பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இவ்விழாவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சிந்துமதி மற்றும் பள்ளி ஆசிரியைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் செயலர் சங்கர் தலைவர் சண்முகராஜ் பாண்டியன் , பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் குழந்தைராஜன் ஜெகன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.