அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதியில் விவசாயிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதிகளில் உப்பாத்து ஓடை முழுவதும் தூர் வாரப்படும் வயல்களில் பயிா்கள் சேதமாகாத வகையில் பாதுகாக்கப்படும் என்று பல இடங்களில் ஆய்வு செய்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.
தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பட்டி விவசாய கழிவு வாறுகால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி கழிவு நீர் கலக்கும் இடங்கள் உப்பாத்து ஓடையில் 24 கண்மாய் உடைப்பு ஏற்பட்டு சாி செய்யப்பட்ட இடங்கள் முள்ளக்காடு நான்குவழிச் சாலை அருகே கோவளம் கடல் பகுதிக்கு தண்ணீர் செல்லும் இடங்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தாா்.
மழைக்காலத்தில் இந்த பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாவது குறித்து விவசாய சங்க ஓருங்கிணைப்பாளர் ஜோதிமணி, அமைச்சர் கீதாஜீவனிடம் எடுத்துக் கூறினாா். மழைக்காலத்தில் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயமும் மக்களும் கடுமையான பாதிப்பை சந்திக்க கூடிய நிலை இருந்து கொண்டிருக்கிறது. கழிவுநீர் வடிகாலை விட வயல்கள் பள்ளத்தில் இருப்பதால் தண்ணீர் வயல்களுக்குள் வந்து விடுகிறது. இதனால் கழிவுநீர் வடிகாலை இன்னும் அழமாக தோண்டி அதில் உள்ள கற்களை எல்லாம் அகற்றினால் தான் கடலுக்கு தண்ணீர் சீராக செல்லமுடியும் என்று விவசாயிகள் தொிவித்தனா்.
உடனடியாக இரண்டு ஜேசிபிகளை கொண்டு வடிகாலை தோண்டுவதற்கு அனுமதிப்பதாக அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா். தற்போது உள்ள நீர் வழிப்பாதையை தோண்டி கழிவுகளை அகற்றினால் கடலுக்கு தண்ணீர் சீராக செல்லும் அதனையும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அமைச்சர் கீதாஜீவன் அதிகாாிகளிடம் விரைவாக பணிகளை துவக்கி மழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
மாநகராட்சி ஆணையா் பிாியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஓருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால் செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு பொருளாளர் சின்னக்குட்டி தான்யேல் வேளாண்மை இயக்குநா் பொியசாமி, மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், இளநிலை பொறியாளர் செல்வக்குமாா், மற்றும் மணி , அல்பட். வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்பட பலா் உடனிருந்தனா்.