மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு நிரை போட்டு அபிஷேகம், அலங்காரம், கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த நேரத்தில் மூலவர் அம்மனுக்கு பக்தர்களின் அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது. கொலுமண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.
நவராத்திரி திருவிழாவை யொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருகிறார். அதன்படி முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார். அம்மனுக்கு முன்பு தண்ணீர் கோலம் போடப் பட்டு அழகுற காட்சி அளித்தது.
இன்று (புதன்கிழமை) வளையல் விற்றது. நாளை ஏகபாத மூர்த்தி, நாளை மறுநாள் ஊஞ்சல் அலங்காரம், 27-ந் தேதி ரசவாதம் செய்த படலம், 28-ந் தேதி ருத்ரப சுபதியார் திருக்கோலம், 29-ந் தேதி தபசுகாட்சி, 30-ந் தேதி மகி ஷாகரமர்த்தினி, 1-ந் தேதி சிவ பூஜை செய்யும் அலங்காரங் களில் அம்மன் காட்சி தருகிறார்.
விழாவையொட்டி 2-ம் பிரகாரம் முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து கொலு அலங்கார கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 அரங்குகள் அமைக் கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள், அம்மன் அவதாரம், திருவிளையாடல் புராணங்கள், முருகன் விநாயகர், அஷ்டவடசுமிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கைலாய காட்சி போன்ற கொலு அலங்கார அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி பொற்றாமரைக்குளம்,அம்மன்,சுவாமி சன்னதிகள். 2-ம் பிரகாரம் மின்விளக்குக ளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மீனாட்சி அம் மன் மற்றும் கொலு அலங்காரங்களை கண்டு ரசித்தனர். மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை யிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம். வீணை கச்சேரி, கர்நாடக இசை நிகழ்ச்சி, தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.