கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா போத்தனூர் ரோட்டில் நடந்தது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,
உடன் தலைவர் கிதர் முஹம்மது, செயலாளர் காதர் மைதீன், துணைச் செயலாளர் இப்ராஹிம், கௌரவ ஆலோசகர் முகமது இஸ்மாயில், தாஜுதீன், கோவை மாவட்ட அரசு காஜி அப்துல் ரஹீம், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிறுவனர் குருஜி ஸ்ரீ வாத்மா உள்ளிட்டார். மேலும் நிகழ்ச்சியில் மரம் நடும் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.