தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம்.
காங்கயம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் கி.பால்ராஜ் தலைமை வகித்தார். இதில், பள்ளிகளில் வகுப்புகள் முடியும் மாலை நேரங்களில் பள்ளிக்கு அருகில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் குழு சேர்வதை போலீஸார் கண்காணிக்க வேண்டும், பேருந்து நிலையப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மீது பொதுமக்களின் சந்தேக நடவடிக்கைகள் ஆகியன கண்காணிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை காங்கயம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் பரிமளா உள்ளிட்டோர் வழங்கி, உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் ஜோதிலட்சுமி, தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் மதுமதி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.