தேனி அருகே பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கனிமொழி கருணாநிதி எம் பி பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டு இதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரமால் இருந்தது இதனை இப்பகுதி மக்கள் நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களிடம் முறையிட்டனர்
இதனை உடனடியாக பரிவுடன் பரிசீலித்த தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குரு பெயர்ச்சி உள் மற்றும் விளையாட்டு அரங்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்கத் தமிழ்ச்செல்வன் எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மிதுன் சக்கரவர்த்தி பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் உள்ளிட்ட நகர மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்