அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் வட்டம் பெரியநாகலூர் ஊராட்சி காட்டுபிரிங்கியம் பாலக்கரை கிராமத்தில் மூன்று தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொது பாதையை தடை செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார்
மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைஅருணன் கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர்கள் மலர்கொடி சந்தானம் குணா மூத்த தோழர் சிற்றம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் மற்றும் அன்பு மதி சின்னதுரை ஆனந்தவல்லி பால முருகன் ஆர்த்தி பழனிவேல் பாலு சேகர் மங்களராஜா உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்