அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்து ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம் என் செந்தில் தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் ஜி சரவணன் மாவட்ட பொருளாளர் த முத்து அமைப்பு செயலாளர்கள் செல்வமணி சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் அமிர்தலிங்கம் மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி திருநாவுக்கரசு சசிகுமார் ரமேஷ் ரவி திருமாறன் ராஜ்குமார் ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்
மாநில பொதுச்செயலாளர் பழனிச்சாமி சிறப்புரையாற்றினார் சத்தியசீலன் திருநாவுக்கரசு கீழப்பழுவூர் நாகராஜன் கரை வெட்டி தமிழரசன் நடுவலூர் தங்கவேலு உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது