பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்…..
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தலா 1 லட்சம் வீதம் ,10 மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவித் தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது 750- மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் கோவி.அய்யாராசு ,
தாமரைச்செல்வன் , முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாசர்,பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிஃபாயி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முபாரக் உசேன், ராஜகிரி ஊராட்சி செயலர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்