போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பெண்களுக்கான வேலை தொடர்பான பயிலரங்கம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் மகளிர் மையத்தின் சார்பாக மாணவிகளுக்கு பயிற்சி பெற்ற மாணவிகளால் நடத்தப்படும் ஸ்பார்க் ஒர்க் ஷாப் என்ற தலைப்பில் ஆரி வேலை தொடர்பான பயிலரங்கம் கடந்த நான்கு நாட்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 152 மாணவிகள் 6 குழுக்களாக பிரிந்து பங்கேற்றனர் இந்த பயிலரங்கத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் தலைமைப் பண்பை வளர்த்தல் கைத் தொழில் கற்றல் தொழில் முனைவராக வளர்ச்சியடைதல் ஆகிய திறமைகளை மேம்படுத்தி சமூகத்தில் பொருளாதார தன்னிறைவு பெற வழி வகை செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகள் பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் எஸ் இராமநாதன் உபதலைவர் எஸ். ஞானவேல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் நிகழ்ச்சி தலைமை வகித்தார்.கல்லூரி மகளிர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ் விஜயலட்சுமி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் எஸ். அன்புச்செல்வி ஜே ஜின்ஸி எம். கலாவதி பெ.ரேணுகாதேவி நா. யுவப் பிரியா ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கனிவுடன் உபசரித்தனர்.
மேலும் நினைவுநாளையொட்டி இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் பயின்ற ஆரி வேலை கண்காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பாக பயின்ற மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் கல்லூரி நிர்வாகிகள் மகளிர் மைய உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.