இராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர். 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
தங்களின் விவசாய நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கோடை உழவு பணியை செய்திருந்தனர். தற்போது பருவமழையை நம்பி இந்த ஆண்டு விவசாயிகள் நிலத்தை மீண்டும் உழவு செய்து நெல் விதைகள் விதைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விவசாய பணியை தொடங்கிவிட்டனர்.