கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் கல்லூரி சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட நாளை சிறப்பிக்கும் வகையில் நேற்று டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளுடன் பேரையூரின் முக்கிய வீதிகளில் பேரணியாக
சென்று டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வை பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த பேரணியை கல்லூரியின் தலைவர் அகமதுயாசின்
வழிகாட்டுதலின் படி, முதல்வர் ராமர் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பேரையூர் உதவி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப் பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்சியை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணிமாறன் ஒருங்கிணைத்தார்.