திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் மு.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, திண்டிவனம் தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் ம.தனசேகரன் பங்கேற்று 750 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் பட்டம் பெறும் நீங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று வலியுறுத்தினார். மேலும் அனைவரும் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்வில் கல்லூரி இயக்குநர்கள் டிகேஜி ஆனந்தன், அப்பாண்டைராஜ், டிடிகே ராதா, சிவசங்கரன், ஆசிரியர் பா.சுரேஷ் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.