தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தானசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் இவர்களை நகரின் தூய்மை பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்து,அசிங்கமாக பேசியும், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன் காரணமாக தூய்மை பணியாளர்கள் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் முகப்பு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் போலீசார் மற்றும் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன் முகமது தூய்மை பணியாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். பெரியகுளம் பகுதியில் தூய்மை பணியாளர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..